தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் கைதானவர்களின் எண்ணிக்கை 729 ஆக அதிகரித்துள்ளது.
தேர்தல் சட்டங்களை மீறியவர்களை கைதுசெய்வதற்கான 254 சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.
இந்த சுற்றிவளைப்புகளின் மூலம் 571 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் பொலிஸாருக்கு 331 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்த முறைப்பாடுகள் தொடர்பிலும் 158 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
சுவரொட்டிகள் மற்றும் கட்டவுட்களை காட்சிப்படுத்தல், பொதுத் தேர்தல் சட்டங்களை மீறி பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டோரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
