• 455 Martinson, Los Angeles
  • 8 (043) 567 - 89 - 30
  • support@email.com
Lorem ipsum dolor sit amet Go UP! Stay Connected

அமீர் இயக்கத்தில் நடிக்கவுள்ள சிம்பு

சிம்புவின் வாலு ஒருவழியாக வெளியாகிவிட்டது. இதையடுத்து, இது நம்ம ஆளு வெளிவரவிருக்கிறது.
இந்த இரு படங்கள் தவிர்த்து கௌதம் இயக்கத்தில், அச்சம் என்பது மடமையடா, செல்வராகவன் இயக்கத்தில், கான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்தப் படங்களுக்குப் பிறகு அடுத்த வருடம், அமீர் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கிறார். இது சிலர் சொல்வது போல் இரண்டு நாயகர்கள் கதையல்ல. சிம்பு தனி ஹீரோவாக இந்தப் படத்தில் நடிக்க உள்ளார்.

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 1467 முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து இதுவரை 1467 முறைப்பாடுகள் தேர்தல்கள் செயலகத்திற்குப் பதிவாகியுள்ளன.
சுவரொட்டிகள் மற்றும் கட்டவுட்களை காட்சிப்படுத்தல் தொடர்பாகவே அதிக எண்ணிக்கையான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாடுகளை ஏற்கும் பிரிவு குறிப்பிடுகின்றது.
இதுதொடர்பாக 309 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இதுதவிர கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தல் தொடர்பிலும் 218 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அரசாங்க உடைமைகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை குறித்து 192 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் குறித்து 37 சம்பவங்களும் தமக்குப் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாடுகளை ஏற்கும் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை S.M.S. ஊடாகவும் தெரிவிக்கலாம்

தேர்தல் வன்முறைகள் அல்லது சட்டமீறல்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை S.M.S. எனப்படும் குறுந்தகவல் ஊடாகவும் தெரிவிப்பதற்கான திட்டமொன்றை தேர்தல்கள் செயலகம் இன்று (14) அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கமைய 15 ஆம், 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் இந்த சேவையின் ஊடாக முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை EC இடைவெளி சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் பெயர் அதன் பின்னர் மற்றுமொரு இடைவெளிவிட்டு முறைப்பாட்டை குறிப்பிட்டு 23 43 என்ற இலக்கத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.

மடுத்திருத்தலத்தின் திருவிழாவை முன்னிட்டு விசேட ரயில் சேவை

மன்னார் மறைமாவட்டத்தின் புனித தலமான மடுத் திருத்தலத்தின் திருவிழா நாளை (15) சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
திருகோணமலை – மட்டக்களப்பு மடு திருத்தலத்திற்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கான விசேட ரயில் சேவைகளை ஆரம்பிப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய இன்று (14) முற்பகல் முதல் நீர்கொழும்பிலிருந்து மடு வரை விசேட ரயில் சேவையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிடுகின்றது.
இதுதவிர நாளைய தினமும் நீர்கொழும்பிலிருந்து ரயில் சேவையொன்றை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் கைதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் கைதானவர்களின் எண்ணிக்கை 729 ஆக அதிகரித்துள்ளது.
தேர்தல் சட்டங்களை மீறியவர்களை கைதுசெய்வதற்கான 254 சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.
இந்த சுற்றிவளைப்புகளின் மூலம் 571 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் பொலிஸாருக்கு 331 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்த முறைப்பாடுகள் தொடர்பிலும் 158 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
சுவரொட்டிகள் மற்றும் கட்டவுட்களை காட்சிப்படுத்தல், பொதுத் தேர்தல் சட்டங்களை மீறி பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டோரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கடிதத்திற்கு மஹிந்த ராஜபக்ஸவிடமிருந்து பதில் கடிதம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கடிதத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் .
ஜனாதிபதியின் கடிதத்தில் வேறு தரப்பினரால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படையற்ற விமர்சனங்களை நிராகரிப்பதாக பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுளள்து .
கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் முழுவதும் வெளியாகும் முன்னரே அலரி மாளிகையில் இருந்து வெளியேறியதாகவும் தேர்தல் முடிவடைந்து சில தினங்களின் பின்னர் கட்சி தலைமைத்துவம் மற்றும் கட்சியை ஜனாதிபதியின் கோரிக்கையின் பிரகாரம் தாம் வழங்குவதற்கு தீர்மானித்ததாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 பெப்ரவரி மாதமளவில் பெரும்பான்மையான கட்சி ஆதரவாளர்களினதும் மக்களினதும் வேண்டுகோள் மீண்டும் தாம் செயற்பாட்டு அரசியலில் பிரவேசிப்பதற்குக் காரணமாக அமைந்ததாக முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனவரி மாதம் 9 ஆம் திகதி தாம் மக்களின் அபிப்பிராயத்திற்கு மதிப்பளித்ததைப் போன்றே பொதுத் தேர்தலில் மக்களின் அபிப்பிராயத்திற்கு ஜனாதிபதி மதிப்பளிப்பார் என எதிர்ப்பார்ப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது பதில் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.