• 455 Martinson, Los Angeles
  • 8 (043) 567 - 89 - 30
  • support@email.com

எம்மை பற்றி

அஸ்ஸலாமு அழைக்கும்

எமது சேவை கடந்த 2011 நவம்பர் 06 அன்று இலங்கை வாழ் தமிழ் பேசும் முஸ்லிம்  மக்களின் நலன் கருதி உருவாக்கப்பட்டதே எமது சேவை. அன்று முதல் இன்று வரை முஸ்லிம்களுக்காக உலக நடப்புக்கள், முக்கிய செய்திகள், ஹதீஸ் துணுக்குகள், மருத்துவ குறிப்புக்கள் உடன் பல சுவாரஸ்யமான தகவல்களை எமது குறுந்தகவல் சேவை சுமந்து வருகிறது.

எமது சேவை அன்றிலிருந்து ஒரு தனிப்பட்டவரின் முயற்சியின் மத்தியில் இயங்குவதோடு பல தடைகளை தாண்டி செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பல சவால்களை முகம் கொடுக்க வேண்டிய சமயங்களில் பல எமது வாசகர்களின் வழிகாட்டுதலில் கீழும் எமது பணி தொடர்ச்சியாக வளர்ச்சி கண்டு வருகிறது என்பதும் மறைக்க முடியாத உண்மையாகும்.

இன்னும் இன்னும் சவால்களை தாண்டி பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளை தாண்டி எமது சேவை உங்களுக்காக இயங்க காத்திருக்கின்றது என்பதுடன் அந்த கனவிற்கு உங்கள் பிரார்த்தனைகள் அவசியம் தேவைப்படுவதும் உண்மையே..

அந்த வகையில் எமது வளர்சிக்கு உங்கள் பிரார்த்தனைகளில் எம்மையும் சேர்த்துக் கொள்ளுமாறு பணிவாய் வேண்டிக் கொள்கிறோம்.

எமக்காக பல வலிகாட்டல்கள், அனுசரணைகள், உதவிகள் போன்ற பலவற்றை செய்துவரும் எமது உறவுகளுக்கும் இந்த தருணத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எமக்கு நேரான் பாதையை காட்டுவானாக.

எமது சேவை பற்றிய உங்கள் கருத்துக்கள் மற்றும் எமது பணிக்கான உங்களது வழிக்காட்டல்களை நாம் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.

சகல தேவைகளுக்கும் +94721960963 எனும் இந்த தொலைபேசி இலக்கத்துடனோ அல்லது எமது பேஸ்புக் தளம் ஊடாகவோ தொடர்பு கொள்ளவும்.

எமது சாதனைகள்:

கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாத முதலாம் வாரம் SOCIAL BAKERS எனும்  ட்விட்டர் தரப்படுத்தலில் எமது MOBIHUT சேவை 5 ஆம் இடத்தை எமது உறவுகளின் ஆதரவோடு பெற்றமை எமது சாதனையின் முதல் படியாகும்.



மேலும் அதே தரப்படுத்தலில் இலங்கையில் கூடுதலான FOLLOWERS கொண்ட பல முன்னணி சிங்கள, தமிழ், ஆங்கில ஊடகங்களுக்கு மத்தியில் இன்றும் எமது சேவை 24 ஆம் இடத்தை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.