• 455 Martinson, Los Angeles
  • 8 (043) 567 - 89 - 30
  • support@email.com

About Us

அஸ்ஸலாமு அலைக்கும்

                                   எமது இணையத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. "mobihut "எனும் பெயரில் சமூக வலைதளங்களில் மக்கள் மனதில் நல்ல பல பெயர்களுடன் செயற்பட்டு வரும் இந்த சேவை யாரால் செய்யப்படுகிறது. ஒரு தனி நபரா? அல்லது ஒரு குழுவா? என பல உள்ளங்கள் கேள்வி எழுப்பி இருந்தன. எமது பேஸ்புக் மற்றும் எமது தொலைபேசி இலக்கத்திற்கு குருந்ததகவல் மூலமும் கேள்வி கேட்டு இருந்தனர்.

                                   இதுவரை யாரிடமும் சொல்லவில்லை மற்றும் இனிமேலும் சொல்லக் கூடாது என இருந்தேன். எனினும் இந்த சேவை பற்றி வேறு பலர் சில வதந்திகள் மற்றும் இந்த சேவைக்கு சம்பந்தம் இல்லாத சிலர் தான் தான் செய்வதாக பல பொய்களை இட்டுக்கட்டியுள்ளனர். அந்த ஒரு காரணத்திற்காக இந்த சேவை பற்றி சில உண்மைகளையும் என்னை பற்றியும் உங்களுக்கு சொல்ல கடமைப்படுகின்றேன்.

முதலில் என்னை பற்றி சிலவற்றையும் இந்த சேவை பற்றியும் சொல்கின்றேன்:-

                              எனது பெயர் Affa Muhammadh, நீர்கொழும்பில் வசிக்கின்றேன். தற்போது உயர்தர வகுப்பில் கலை பிரிவில் கற்று வருகின்றேன். இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் 2015 இல் உயர்தர பரீட்சை எழுதவுள்ளேன். உங்களுடைய துஆக்களில் என்னையும் மறக்காமல் இணைத்துக் கொள்ளுங்கள்.

                                    எனக்கு ஊடகங்களில் அதிக ஆதிக்கங்கள் சின்ன வயதில் இருந்தே காணப்பட்டு வந்தமையால் ஏதோ ஒரு அல்லாஹ்வின் ஏற்பாட்டில் 06-11-2011 அன்று எனது சேவை ஆரம்பிக்கப்பட்டதுடன் முதலாவது SMS 27-12-2011 அன்று போடப்பட்டது. அன்று முதல் இன்று வரை அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியோடு மிகவும் சிறப்பாக செயற்பட்டு வருகிறது .

                                           இந்த பக்கத்தில் இறுதியில் எனது புகைப்படமும் இணைப்பபட்டுள்ளது. மேற்கூறப்பட்ட விடயங்கள் யாவும் பெருமைக்காக சொல்லப்படவில்லை என்பதுடன் பல உறவுகளின் கேள்விகளுக்கு பதில் கொடுப்பதற்கும் ஒரு சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்குமே இணைக்கப்பட்டது.

எனது சேவை பற்றிய மேலதிக விபரங்கள் தேவைப்படின் எனது தொலைபேசிகளின் ஊடாக தெரிந்து கொள்ளலாம்
072-1960963
078-7335333